பிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா


பிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா  23/11/2013  அன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் நமது பிரான்ஸ் மண்டல தலைவர் சகோதரர் ருக்னுதீன் அவர்களுடைய வீட்டில் நடைப்பெற்றது.

அன்றைய நிகழ்ச்சியின் தலைமை உரையாக FRTJ வின்  தலைவர் சகோதரர் ருக்னுதீன்  அவர்கள் துவக்கி வைத்தார்

அதற்கு பிறகு சகோதரர் முஹம்மத் இன்சாப்  அவர்கள் “தௌஹீத்வாதிகள் என்றால்  யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
                                                                                          
பின்பு    FRTJ யின் அடுத்தகட்ட செயல்பாடுகள் என்ன? மற்றும் ஆலோசனைகள், கருத்துக்கள் கேட்கப்பட்டது.


அதன் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 

1. FRTJ யின் தாவா பணிகளில் மார்க்க புத்தகங்கள்  நோட்டிஸ்கள்  கொடுத்தும், தமிழ் மொழியில் உள்ள மார்க்க புத்தகங்களை  பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்து அதை நாம் தாவா செய்யும் போது நம்  சகோதார சகோதரிகளுக்கு வழங்கவேண்டும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
2.      ஒவ்வொரு மாதமும்  கடைசி 4 வது வாரம் அதாவது மாதத்தின் இறுதி சனிக்கிழமையில் கட்டாயம் பிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா  நடத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
3.      ஒரு மாதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை  மறு மாதம் கூட்டம் நடத்தும் போது முன்னர் பேசிய தீர்மானங்கள்  அது  எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க   வேண்டும்.
4.      FRTJ யின் நிர்வாகிகளிடமும் மற்றும் உறுப்பினர்களிடமும் எதிர் வரும்  காலங்களில்,  தாவா பணியின் போதும் மற்றும் இதர நிகழ்ச்சியின் போதும்   பயான் செய்ய யார் ? யார்தயாராக உள்ளார்கள் என்று கேட்டு அறியப்பட்டது.

5.      FRTJ  வெப்சைட்டை விரிவுபடுத்தவும்,  இன்னும் அதிக வசதிகளை ஏற்படுத்தி புதுப்பிக்கவும்,  நம் சகோதரர்கள் செய்யும் பயான்களை வீடியோவாக FRTJ வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யவும் அத்துடன் உலக நடப்புகளையும் சேர்த்து  தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் FRTJ      வெப்சைட்டை இயக்க வேண்டும்  என்று முடிவு செய்யப்பட்டது.
6.      FRTJ நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நம் சகோதரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப FRTJ நிர்வாகத்தில் (மேலாண்மை குழு) 5 நபர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது அதில் முன்னால் நிர்வாகிகளான
  1. சகோதரர் அதீன், 
  2. சகோதரர்  இன்சாப், மற்றும் உறுப்பினர்களான
  3. சகோதரர் உஸ்மான்,
  4. சகோதரர் முஹம்மது பாரூக்,
  5. சகோதரர் அப்துல் காதர் ஆகியோர் மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.

7.      FRTJ யில் பெண்களுக்கான பெண்களே செய்யும்   தாவா பணி துவக்கலாம் , அதில் நமது சகோதரிகள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சென்று பயான் மற்றும்  தாவா பணி செய்வார்கள் அதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
8.      TNTJ தலைமையிலிருந்து வெளியாகும் வரும் 2014 ஆண்டிற்கான காலண்டர்களை வரவழைத்து நம் சகோதர சகோதரிகளுக்கு இலவசமாகவழங்கப்பட இருக்கின்றது.
9.  தலைமையின் அனுமதியோடு TNTJ தாயிக்கள் மூலமாக மார்க்க சொற்பொழிவு அல்லது  “இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு  செய்வது என்பதாக முடிவு செய்யப் பட்டது                  
10.  புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஏற்பாடுகளிலும் நம் சகோதரர்களை  பங்களிக்கும் படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது 

மசூராவை  சிறப்பாக நடத்தி வைத்த எல்லா வல்லஅல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் அல்லாஹ் அக்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.