கேள்வி : zaka oru muraithan koduka vanduma?
தமிழாக்கம் : ஸக்காத் ஒரு முறை தான் கொடுக்க வேண்டுமா?
shihana rizan – srilanka
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமைப்பட்டவர்கள்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 8
ஸக்காத்தைப் பொருத்தவரையில் ஒரு முறை ஸக்காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துப்பட ஸஹீஹான எந்த ஹதீஸ்களும் இல்லை.
ஸக்காத்தைப் பொருத்தவரையில் ஒரு பொருளுக்கு ஒரு முறை ஸக்காத் கொடுக்கப்பட்டால் அதற்கு மீண்டும் மீண்டும் ஸக்காத் கொடுக்கத் தேவையில்லை மாறாக அதன் மூலம் வரக்கூடிய மேலதிக வருமானத்திற்கு மாத்திரம் தான் ஸக்காத் கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு ஒருவரிடம் 11 பவுன் தங்கம் அல்லது அதற்கு சரி சமனான பணம் இருந்தால் அவருக்கு ஸக்காத் கடமையாகிவிடும். அவர் 11 பவுனுக்குறிய ஸக்காத்தைக் கொடுக்க வேண்டும்.
11 பவுனுக்குறிய ஸக்காத்தை அவர் கொடுத்ததின் பின் அதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் மேலதிக வருமானத்திற்குத் தான் அவர் ஸக்காத் கொடுக்க வேண்டுமே தவிர ஏற்கனவே கொடுத்த 11 பவுனுக்கும் திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டியதில்லை.
ஆக ஸக்காத் என்பது ஆயுலில் ஒரு முறை கொடுக்க வேண்டும் என்று தாங்கள் விளங்கியிருந்தால் அது தவறானதாகும் ஒரு பொருளுக்கு ஒரு முறை ஸக்காத் கொடுக்க வேண்டும் என்பதுதான் சரியானதாகும்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
பதில் : ரஸ்மின் MISc