தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395
இதன் பொருள்:
எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ
காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆதாரம்: அஹ்மத் 49, 60, 77
அல்லாஹும்ம பா(எ)(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி(இ) வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப(இ) குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(இ)(க்)க மின் ஷர்ரி நப்(எ)ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி
இதன் பொருள்:
இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.
தினமும் ஓத வேண்டிய துஆ
பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: புகாரி 3293
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல்லி ஷையின் கதீர்.
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
கழிவறையில் நுழையும் போது
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322
இதன் பொருள் :
இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
கழிவறையிலிருந்து வெளியேறும் போது
غُفْرَانَكَ
ஃகுப்(எ)ரான(க்)க ஆதாரம்: திர்மிதீ 7
உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ஆதாரம்: நஸயீ 5391, 5444
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
இதன் பொருள்:
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1165
பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165
சாப்பிடும் போதும், பருகும் போதும்
பி(இ)ஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5376, 5378
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி
எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781
பின்பும் பருகிய பின்பும்
அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(இ)ர(க்)கன் பீ(எ)ஹி ஃகைர மக்பி(எ)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(இ)னா
இதன் பொருள் :
தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல. ஆதாரம்: புகாரி 5858
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை
பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்
பி(இ)ஸ்மில்லாஹ்
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3280, 5623
கோபம் ஏற்படும் போது
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
இதன் பொருள் :
ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: புகாரி 6115
தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3276
நோயாளியை விசாரிக்கச் சென்றால்
பி(இ)ஸ்மில்லாஹ்
என்று மூன்று தடவை கூறி விட்டு
அவூது பி(இ)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு
என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.
இதன் பொருள் :
நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 4082
அல்லது
லா ப(இ)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்
இதன் பொருள் :
கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்
எனக் கூறலாம். ஆதாரம்: புகாரி 3616
இழப்புகள் ஏற்படும் போது
இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் 1525
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ(எ) முஸீப(இ)(த்)தி வ அக்லிப்(எ) லீ கைரன் மின்ஹா
இதன் பொருள் :
நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1525
மழை வேண்டும் போது
இரு கைகளையும் உயர்த்தி
அல்லாஹும்மஸ்கினா
அல்லாஹும்மஸ்கினா
அல்லாஹும்மஸ்கினா
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
இறைவா! எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013
அளவுக்கு மேல் மழை பெய்தால்
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா
என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.
இதன் பொருள் :
இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342
பயணத்தின் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை
அல்லாஹு அக்ப(இ)ர் – அல்லாஹு அக்ப(இ)ர் –
அல்லாஹு அக்ப(இ)ர்
எனக் கூறுவார்கள். பின்னர்
ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி
எனக் கூறுவார்கள்.
இதன் பொருள் :
அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 2392
பயணத்திலிருந்து திரும்பும் போது
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.
இதன் பொருள் :
எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். ஆதாரம்: முஸ்லிம் 2392
வெளியூரில் தங்கும் போது
அவூது பி(இ) (க்)கலிமாதில்லாஹித் தம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்
இதன் பொருள் :
முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882
பிராணிகளை அறுக்கும் போது
உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது
பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(இ)ர்
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன்.
என்று கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5565, 7399
மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும் மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்
அல்லாஹு அக்ப(இ)ர்
அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3348, 4741
மேட்டில் ஏறும் போது
உயரமான இடத்தில் ஏறும் போது
அல்லாஹு அக்ப(இ)ர்
அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 2993, 2994
கீழே இறங்கும் போது
உயரமான இடத்திலிருந்து, மாடியிலிருந்து கீழே இறங்கும் போது
ஸுப்(இ)ஹானல்லாஹ்
அல்லாஹ் தூயவன்.
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 2993, 2994
தும்மல் வந்தால்
தும்மல் வந்தால் தும்மிய பின்
அல்ஹம்து லில்லாஹ்
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர்கூறுவதைக் கேட்டவர்
யர்ஹமு(க்)கல்லாஹ்
எனக் கூற வேண்டும். இதன் பொருள் :
அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
இதைக் கேட்டதும் தும்மியவர்
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக! ஆதாரம்: புகாரி 6224
மணமக்களை வாழ்த்த
பா(இ)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(இ)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(இ)ன(க்)குமா பீ(எ) கைரின்
ஆதாரம்: அபூதாவூத் 1819
என்று மணமக்களை வாழ்த்தலாம்.
உளூச் செய்யத் துவங்கும் போது
பி(இ)ஸ்மில்லாஹி
என்று கூறிவிட்டு உளூச் செய்ய வேண்டும். ஆதாரம்: நஸயீ 77
உளூச் செய்து முடித்த பின்
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு
இதன் பொருள் :
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345
பாங்கு சப்தம் கேட்டால்
பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி 611
பாங்கு முடிந்தவுடன்
பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும். (பக்கம் : 74-76-ல் ஸலவாத் இடம் பெற்றுள்ளது.)
அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு
இதன் பொருள் :
இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக! ஆதாரம்: புகாரி 614, 4719
அனைத்து துன்பங்களின் போதும் ஓத வேண்டியவை
லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹலீம் லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்பு(இ)ல் அர்ஷில் அளீம். லாயிலாஹ இல்லாஹூ ரப்பு(இ)ஸ் ஸமாவா(த்)தி வரப்பு(இ)ல் அர்ளி வரப்பு(இ)ல் அர்ஷில் கரீம்.
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் சகிப்புத் தன்மையும், மகத்துவமும் மிக்கவன். வானங்கள், பூமி, மகத்தான அர்ஷு ஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (புகாரி 6346)
தூங்கும் போது
பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
இதன் பொருள்:
இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)
ஆதாரம்: புகாரி 6312
நூல்:துஆக்களின் தொகுப்பு
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்