ஹஜ் செய்பவருக்கான தகவல்கள்

  1. இஹ்ராம் உடை
  2. நிய்யத்
  3. தல்பியா
  4. தவாஃப் அல்குதூம்
  5. தவாஃபின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.
  6. ஹஜ்ருல் அஸ்வத்
  7. ருக்னுல் யமானி
  8. மகாமு இப்ராஹிம்
  9. ஸஃபா மர்வா வில் ஸஃயி செய்வது (ஓடுவது)
  10. 8 ம் நாள் மினாவுக்கு செல்லுதல் (தர்வியா)
  11. 9 ம் நாள் அரஃபா (அரஃபா நாள் )
  12. முஜ்தலிபாவிற்கு செல்லுதல்
  13. 10 ம் நாள் ஜம்ராவில் கல்லெறிதல்
  14. 11ம் 12 ம் மற்றும் 13 ம் நாட்கள். (அய்யாமுத் தஷ்ரீக்)
  15. தவாஃபுல் விதாஃ
  16. இஹ்ராமில் தடுக்கப் பட்டவைகள்
  17. ஹஜ்ஜில் தடுக்கப் பட்டவைகள்
  18. உம்ரா ஹஜ்ஜில் அதிகமதிகம் நன்மைகளை அடைதல்
  19. முக்கிய துஆக்கள்

இஹ்ராம் உடை

இஹ்ராம் உடை என்பது தைக்கப் படாத இரண்டு ஆடைகளாகும். ஒன்றை மேலங்கியாக வும் மற்றொன்றை இடுப்பிலும் அணிய வேண்டும்.முக்கியமாக இஹ்ராம் ஆடை தைக்கப் படாத ஆடையாக இருத்தல் அவசியம் .தற்போது இஹ்ராம் துணியிலேயே பெல்ட் வைத்து pin பண்ணி பட்டன் வைத்துள்ளார்கள்.இரண்டு செட் வாங்கிக் கொள்ளவும்.

இடுப்பை சுற்றி தைக்கப் படாத பெல்ட் அணிந்து கொள்ளலாம்.

செருப்பும் தைக்கப் படாமல் இருக்க வேண்டும்.வெயிட் குறைவான பிளாஸ்டிக் செருப்பு 2 செட் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.மினா மற்றும் அரபாவில் மிகவும் அவசியமாக இருக்கும்.(ஒது செய்யவும் பாத்ரூம் செல்லவும் இலகுவாக இருக்கும்.)

மருந்து மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும்.

ஹரமிர்க்குள் காலணிகள் கொண்டு செல்ல முதுகில் மாட்டிக் கொள்ள கூடிய (சுருக்குப் பை போன்ற) bag எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்குர்ஆன் மற்றும் துஆ கையேடுகள் அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

செல்போன் எடுத்துக் கொள்ள வேண்டும்.(சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்)

மக்காவில் கட்டிட வேலைகள் நடை பெறுவதால் தூசி அலர்ஜி ஆகாமல் இருக்க முகத்திற்கு mask மருந்து கடைகளில் வாங்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய kit bag இல் பல் துலக்கும் brush,பேஸ்ட் சோப்,கத்தரிகோல் எடுத்துக் கொள்ளலாம்.

மறக்காமல் நகத்தை வெட்டிக் கொள்ள வேண்டும்.(அக்குள்,மர்மஸ்தான பகுதி) முடிகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக இரண்டு மாதங்கள் முன்கூட்டி நடைபயிற்சி செய்தல் பயனுள்ளதாக இருக்கும்.

ஹஜ்ஜிற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை மற்றும் கையில் கட்டிக் கொள்ள

badge கொடுப்பார்கள்.அதை தொலைத்துவிடாமல் பாது காத்து வைத்திருக்க வேண்டும்.

பாஸ்போர்ட் அடையாள அட்டை போன்றவற்றை நகல் (photocopy) எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.[divider]

நிய்யத்

வீட்டிலிருந்து கிளம்பும் போது நன்றாக குளித்து விட்டு நறுமணம் பூசிவிட்டு இஹ்ராம் உடை அணிந்து நறுமணம் பூசிவிட்டு கிளம்ப வேண்டும்.

கையில் இஹ்ராம் துணிகள்,செருப்பு, பெல்ட் போன்றவைகளை கைப் பெட்டியில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Transit அதாவது Egypt போன்ற ஒரு நாட்டில் இறங்கி செல்பவர்கள் போதுமான நேரம் இருந்தால் அங்கு சென்றும் குளித்துவிட்டு இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.

விமானத்தில் ஏறியவுடன் பிரயாண துஆ வை ஓதிக் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து செல்பவர்கள் “தமத்துவ்” என்ற முறையில் ஹஜ் செய்பவர்களாக உள்ளார்கள்.

விமானத்தில் செல்லும் போது எல்லை வரும்போது அறிவிப்பு செய்வார்கள் அப்போது “லெப்‌பைக்க வ உம் ரத்தன்” என்று நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும்.ஹஜ் செய்பவர்கள் “லெப்‌பைக்க வ உம் ரத்தன் ஹஜ்ஜதன் ” என்று நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும்.[divider]

தல்பியா

அவரவர்களுக்கு இஹ்ராமிற்காக ஒரு எல்லை இருக்கிறது.எல்லை வந்த பிறகு அறிவிப்பு செய்வார்கள்.அப்போது இஹ்ராமிற்காக நிய்யத் செய்து விட்டு கீழ்க்கண்ட தல்பியாவை கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

[box type=”note” ]

لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ

“லப்பைக் கல்லாஹும்ம லெப்பைக்,லெப்பைக்க லாஷரீக்க லக்க லப்பைக்,இன்னல் ஹம்த வ நிஃமத்த லக்கவல் முல்க் லாஷரீக்க லக்!”

அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி). நூல் : (புஹாரி 1549,5915)[/box]

மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பதற்கு வசதியிருந்தால் குளித்துக் கொள்ள வேண்டும்.

மக்காவில் நுழையும் போது வசதிப்பட்டால் பகலில் நுழைய வேண்டும். நபி (ஸல்) அவர்களிடம் இதற்கு முன்மாதிரி இருக்கின்றது.

மக்காவில் நுழையும் போது இயன்றால் முஅல்லாத் பாபு பனீ ஷைபா (bani shaiba) என்று அழைக்கப்படும் GATE வழியாக உள்ளே நுழைய வேண்டும்.

கஅபாவில் நுழையும் போது மற்ற பள்ளிகளைப் போன்றே வலது காலை எடுத்து வைத்து நுழைய வேண்டும். மற்ற பள்ளிகளில் ஓதும் துஆவான,

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

[box type=”note” ]

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
பொருள்: இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1165[/box]

ஹரமில் பிரவேசித்த உடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

(ஜம்ரதுல் அகபாவில் கடைசி கல் எரியும் வரை தல்பியாவை கூறிக் கொண்டிருக்க வேண்டும்.)[divider]

தவாஃப் அல்குதூம்

ஹரமிர்க்குள் வருகை தந்த பிறகு காபாவை வலம் வரும்வருதலை ‘தவாஃப் அல்குதூம்’ என்றழைக்கப் படுகிறது.

ஒருவர் மக்காவிற்கு எப்போது வருகை தருகிறாரோ அப்போது இந்த ‘தவாஃப் அல்குதூம்’ மை செய்ய வேண்டும்.

கஃபா ஆலயத்தை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் ‘தவாஃப் அல்குதூம்’செயும்போது மட்டும் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நன்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல் புஹாரி 1644, 1617

ஆண்கள் தவாஃப் செய்யும்போது தங்கள் மேலாடையை வலது தோல் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும்

[box type=”note” ]தவாஃப் செய்யும்போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோல் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா பின் முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள் :திர்மிதி 787 அபூதாவூத் 1607[/box][divider]

தவாஃபின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.

தவாஃப் செய்யும்போது அடையாளத்திற்காக பச்சை விளக்கு வைத்திருப்பார்கள்.அதிலிருந்து

தொடங்கி முடிவில் அதே இடத்தில் முடிக்க வேண்டும்.அந்த இடத்தில அதிக நெரிசல் ஏற்படும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்கள் மாஸ்க் அணிவதும், பெண்கள் முகத்திரை அணிந்து முகத்தை மறைப்பதும் கூடாது.

கையுறை காலுறை அணியக் கூடாது.எந்தவிதமான காலணிகளும் அணிய கூடாது.

முக்கியமாக ஹஜ்ருல் அஸ்வத் கல்லை தொடுவதற்காக மற்றவர்களை நெருக்கி தொல்லை கொடுக்க கூடாது.அமைதியான முறையில் துஆ திக்ருகள் செய்து கொண்டு சுற்றி வர வேண்டும். ‘ஹிஜ்ரு’ எனப்படும் காபா ஆலயத்தின் வெளிப்புறத்தில் உள்ள அறைவட்டமும் காபாவை சேர்ந்ததாகும் எனவே அதையும் சேர்த்து சுற்ற வேண்டும்.காபா ஆலயத்தின் சுவர்களை தொட்டு துஆ கேட்க ஆதாரமில்லை.தவாஃப் செய்வதற்கு இரவு 12 மணிக்கு பிறகு அல்லது தஹஜ்ஜத் நேரம் சிறந்த நேரம் அப்போது சிறிது குளிர்ச்சியாக இருக்கும்.[divider]

ஹஜ்ருல் அஸ்வத்

ஹஜ்ருல் அஸ்வத் கல் பதிக்கப் பட்ட மூலையிலிருந்து தவாஃபை துவக்க வேண்டும்.

அடையாளத்திற்காக ஹஜ்ருல் அஸ்வத் எதிரில் உயரமான இடத்தில் பச்சை விளக்கு வைத்திருப்பார்கள்.

முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் மற்ற நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்ய வேண்டும்.

[box type=”note” ]நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்திலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: 2213, 2214.[/box]

ஹஜ்ருல் அஸ்வத் கல்லை மிகுந்த கூட்ட நெரிசலில் தொடுவதற்காக வயதானவர்கள்,சிறியவர்கள்,பெண்கள் போன்றவர்களை இடித்துக் கொண்டும், முண்டியடித்துக் கொண்டும் செல்வது கூடாது.

இயன்றால் முத்தமிடலாம் அல்லது தொட்டு முத்தமிடலாம் அல்லது கையை உயர்த்தி தொடுவது போல சைகை செய்ய வேண்டும்.தக்பீரும் கூற வேண்டும்.

[box type=”note” ]நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள்.(ஹஜ்ருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்( ரலி) நூல் புஹாரி 1612,1613,1632,5293 மற்ற ஆதாரங்கள்: புஹாரி 1611, 1606, 1608[/box][divider]

ருக்னுல் யமானி

ருக்னுல் யமானி என்ற கஃபா வின் மற்றொரு மூலையை இயன்றால் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும்.

[box type=”note” ]நபி (ஸல்) அவர்கள் நான்கு மூலைகளில் ‘யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல் : புஹாரி 166 , 1609[/box]

தவாஃப் செய்யும் போது ருக்னுல் யமானி மூலை வரும்போது

[box type=”note” ]

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار

“ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி),நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616[/box]

மேற்கண்ட துஆ வை ருக்னுல் யமானி மூலையிலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் கல்லின் மூலை வரும் வரை ஒத வேண்டும்.அதன் பிறகு நீங்கள் குர்ஆனிலிருந்தோ அல்லது நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தோ துஆக்களையோ அல்லது உங்களுக்காக பாவ மன்னிப்பு துஆ அல்லது தேவைகள் இம்மை மறுமை வெற்றிக்காக எந்த துஆக்களையும் ஓதலாம்.[divider]

மகாமு இப்ராஹிம்

கஃபா வை தவாஃப் செய்த பிறகு மகாமு இப்ராஹிமில் இரண்டு ரகஅத்கள் தொழ வேண்டும்.

அந்த தொழுகையில் ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ சூராவையும் ‘குல்யா அய்யுஹல் காபிரூன்’ சூராவையும் ஓதிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்து விட்டு ‘மகாமு இப்ராஹிம்’ என்ற இடத்தை அடைந்த போது

“மகாமு இப்ராஹிமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.” என்ற 2:125 வசனத்தை ஓதினார்கள்.

[box type=”note” ]

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ۖ وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ

அந்த ஆலயத்தைமக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக!மகாமே இப்ராஹீமில்தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! ‘தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!’ என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.(அல்குர்ஆன் 2:125)[/box]

[box type=”note” ]பிறகு இரண்டு ரகஅத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் ‘குல்யா அய்யுஹல் காபிரூன்’ சூராவையும் ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ சூராவையும் ஓதினார்கள்.பின்னர் திரும்பவும் ஹஜ்ருல் அஸ்வத்துக்கு சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள்.பிறகு சஃபாவுக்குச் சென்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் 2137 [/box]

இந்த இரண்டு ரகஅத்கள் ‘மகாமு இப்ராஹிம்’ அருகில் தவாஃப் செய்பவர்களுக்கு இடைஞ்சல்

கொடுக்கும் முகமாக இருக்கக் கூடாது.மகாமு இப்ராஹிமை தொட்டு முத்தமிட கூடாது.

தேவையில்லாமல் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.[divider]

ஸஃபா மர்வா வில் ஸஃயி செய்வது (ஓடுவது)

மக்காமு இப்ராஹீமில் இரண்டு ரக் அத் தொழுதவுடன் ஸஃபா மர்வா வில் ஸஃயி செய்ய வேண்டும்.

ஸஃபா வை அடைந்ததும் கிப்லாவை முன்னோக்கி “ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்.”(அல்குர்ஆன் 2:158) என்ற கீழ்க்கண்ட ஆயத்தையும்,“லாயிலாஹ இல்லல்லாஹு துஆ வையும் ஓதிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஸஃபா வை அடைந்ததும் “ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்.” என தொடங்கும் குர் வசனத்தை ஓதினார்கள்.

[box type=”note” ]

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ ۖ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا ۚ وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2:158)[/box]

[box type=”note” ]மேலும் ஸஃபா விலிருந்து கிப்லாவை முன்னோக்கி “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா” என்று மூன்று முறை கூறினார்கள்.பிறகு துஆ செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் 2137[/box]

ஸஃபாவிலிருந்து மர்வா சென்றடைந்ததும் ஒரு சுற்று நிறைவடையும் மர்வாவிலிருந்து ஸஃபா

வந்தடைந்ததும் இரண்டு நிறைவடையும் இந்த அடிப்படையில் ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.

[box type=”note” ]“நபி (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயி செய்தார்கள்.ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் 2137[/box]

ஸஃபாவில் சிறிது தூரம் நடந்ததும் பச்சை விளக்கு அடையாளம் வைத்திருப்பார்கள் அங்கிருந்து அந்த பச்சை விளக்கு முடியும்வரை ஓட்டமாக செல்ல வேண்டும்.

ஸஃபாவில் துஆ திக்ருகள் செய்தது போலவே மர்வா வந்ததும் செய்ய வேண்டும்.

முதல் சுற்று ஸஃபாவில் தொடங்கி ஏழாவது சுற்று மர்வாவில் நிறைவு செய்ய வேண்டும்.

ஏழு சுற்று நிறைவடைந்ததும் முடியை இறக்க வேண்டும்.விரும்பியவர் முடியை முழுமையாக இறக்க வேண்டும் விரும்பியவர் சிறிது கத்தரித்தும் கொள்ளலாம்.

பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடலாம். இத்துடன் உம்ரா நிறைவடைகிறது.[divider]

8 ம் நாள் மினாவுக்கு செல்லுதல் (தர்வியா)

மக்காவில் உள்ளவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் அணிந்து கொள்ளலாம். (group இல் செல்பவர்கள் வயதானவர்கள் மற்றும் பெண்கள் வசதிக்காக ஏழாம் நாள் இரவே மினாவிற்கு சென்று விடுவார்கள்.)

8 ம் நாள் லுஹர் தொழுகைக்கு முன் மினாவிற்கு சென்றுவிட வேண்டும்.அங்கு லுஹரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத் களாக தொழ வேண்டும்.

அதன் பிறகு மக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளை அதனதன் நேரங்களில் தொழ வேண்டும்.

மக்ரிபை மூன்றாகவும் இஷாவை இரண்டு ரக்அத் களாக தொழ வேண்டும்.

8 ம் நாள் இரவு மினாவிலேயே தங்க வேண்டும்.[divider]

9 ம் நாள் அரஃபா (அரஃபா நாள் )

ஹஜ் கிரியைகளில் இந்த நாள் மிக முக்கியமான நாளாக உள்ளது.

ஒன்பதாம் நாள் காலை சுப்ஹு தொழுகையை மினாவிலேயே தொழுதுவிட்டு சூரியன் உதயமாகும் வரை தாமதித்து விட்டு அங்கிருந்து அரபாவிர்ற்கு கிளம்ப வேண்டும்.

வழியில் தல்பியாவும் தக்பீரும் சொல்லிக் கொண்டே சொல்ல வேண்டும்.

இந்த அரஃபா நாளில் சிறிது நேரேமேனும் அரஃபா மைதானத்தில் தங்கிவிட்டால் ஹஜ்ஜை அடைந்துகொள்வார் என்பது நபிமொழியாகும்.

அங்கு (நமீரா)இமாம் குத்பா உரை நிகழ்த்துவார் அதை செவிமடுக்க வேண்டும். அதன் பிறகு லுஹர் தொழுகைக்கு பாங்கு சொல்லி இகாமத் சொல்லி இரண்டு ராகஅத் தொழ வேண்டும் .

பிறகு இகாமத் கூறி அஸர் தொழுகையை ஜம்வு செய்து தொழ வேண்டும்.

அரபா நாளில் சிறிது நேரத்தை கூட வீணாக செலவழிக்க கூடாது.அங்கு கேட்கப் படும் துஆக்களை நிறைவேற்றுவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான்.பின் வரும் நபிமொழியும்

அதன் முக்கியத்துவத்தை பறை சாற்றுகிறது. ஆகவே மறக்காமல் துஆ கையேடுகளை கொண்டு செல்ல வேண்டும்.மேலும் இம்மை மறுமை வெற்றிக்காகவும்,பாவமன்னிப்பு ,மற்றும் தேவைகளை கிப்லாவை முன்னோக்கி கேட்கலாம்.ஜபலுர் ரஹ்மத் மலை அடிவாரத்தில் துஆ செய்வது நபிவழி.

[box type=”note” ]”ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்கள்: நஸயீ2966, 2994 திர்மிதீ 814)[/box]

[box type=”note” ]நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள். (நூல்: நஸயீ2961)[/box]

[box type=”note” ]அரஃபா தினத்தைக் காட்டிலும் வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியார்களை மிக அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் இந்நாளில் மலக்குகளிடம் மிக நெருக்கமாக வந்து, “இவர்கள் எதை விரும்புகிறார்கள்?” என்று கேட்கின்றான். (நூல்: முஸ்லிம் 2402)[/box]

அரபாவில் சூரியன் அஸ்தமிக்கும் வரை தங்கிவிட்டு பிறகு முஸ்தலிபா விற்கு அமைதியாக செல்ல வேண்டும்.[divider]

முஜ்தலிபாவிற்கு செல்லுதல்

அரபாவிலிருந்து சூரியன் மறைந்தபிறகு முஜ்தலிபாவிற்கு வந்துவிடவேண்டும். வந்தவுடன் ஒரு பாங்கும் இரு இகாமத்தும் கூறி மக்ரிபையும் இஷாவையும் தொழவேண்டும்.பிறகு அங்கு படுத்து உறங்கிவிட்டு மறுநாள் பஜ்ரு நேரம் வந்தவுடன் பாங்கு சொல்லி சுப்ஹு தொழவேண்டும்.அதன் பிறகு “மஷ்அருள் ஹராம்” என்ற இடம் வந்ததும் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தும் துஆவும் செய்து விட்டு சூரியன் உதயமாவதற்கு முன் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மினாவிற்கு செல்ல வேண்டும்.

பெண்கள் வயதானவர்கள் பஜ்ரு வரை தாமதிக்காமல் இரவே சென்று விட அனுமதி உள்ளது.ஆனால் அவர்களுடன் அனைவரும் சென்று விட்டனர்.இரவே செல்ல பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் தான் அனுமதி உள்ளது ஆனால் group ஐ வழிநடத்தும் guide கல் முஜ்தலிபாவில் ஹாஜிகளை

தங்கவைக்காமல் அவர்களின் வசதிக்காக மினாவிற்கே அழைத்து சென்று விடுகிறார்கள்.முஜ்தலிபாவில் தங்க வசதி இருக்காது ஏனென்றால் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது போகும்போது ஆளுக்கொரு பாயும் சிறிய போர்வையும் கொண்டு செல்வது நல்லது.

மக்காவில் குறைந்த விலையில் பிளாஸ்டிக் பாய் கிடைக்கிறது.ஜம்ராவில் கல்லெறிய முஜ்தலிபாவில் மலை அடிவாரத்தில் கற்களை பொருக்கி கொள்ளலாம்.தண்ணீர் குடிக்கும் சிறிய காலிபாட்டில் களில் கற்களை நிரப்பிக் கொள்ளலாம்.மொத்தம் 50 க்கும் மேற்பட்ட கற்களை பொறுக்கிக் கொள்ளலாம்.

ஒரு சிலர் முஜ்தலிபாவில் கற்களை பொறுக்காமல் கடைசி நேரத்தில் கல்லெறியும் இடமான ஜம்ராவில் பொறுக்குகிறார்கள் இவ்வாறு செய்தல் கூடாது.[divider]

10 ம் நாள் ஜம்ராவில் கல்லெறிதல்

துல் ஹஜ் பத்தாம் நாள் மினாவிலிருந்து சூரியன் உதயமான பிறகு ஜம்ராவில் கல்லெறிய செல்ல வேண்டும். வழியில் தல்பியாவும் தக்பீரும் சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும்.பெண்கள் மற்றும்

முதியவர்கள் முந்தைய நாள் இரவோ அல்லது 10 ம் நாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்போ

செல்ல அனுமதி உள்ளது.அதன் பிறகு

1 ஜம்ரதுல் அகபா எனப்படும் பெரிய ஜம்ராவில் தொடர்ந்து ஏழு கற்களை எறிய வேண்டும்.ஒவ்வொரு கல்லை எறியும் போதும் “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூற வேண்டும்.

2 பின்னர் குர்பானி கொடுக்க வேண்டும்.

3 அதன் பின்னர் தலை முடியை குறைக்கவோ அல்லது முழுவதுமாக மழிக்கவோ வேண்டும்.

4 பிறகு ஹஜ்ஜுடைய தவாபான “தவாபுல் இபாதா” வை செய்ய வேண்டும்.அதாவது ஏழு முறை

சுற்ற வேண்டும்.மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக் அத் தொழுதுவிட்டு பிறகு சபா மர்வாபில் சயீ செய்ய வேண்டும்.

5 பின்னர் இஹ்ராமிலிருந்து விலக்கப் பட்டவை அனைத்தும் ஹலால் ஆகிவிடும்.

6 அடுத்தடுத்த நாட்களில் கல்லெறிய மினாவிற்கு சென்று தங்கிவிட வேண்டும்.[divider]

11ம் 12 ம் மற்றும் 13 ம் நாட்கள். (அய்யாமுத் தஷ்ரீக்)

11 ம் நாள் அன்று சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் கல்லெறிய ஜம்ராவிற்கு செல்ல வேண்டும்.

முதலில் சிறிய ஜம்ரவான “ஜம்ரதுல் ஊலா” என்ற இடத்தில ஏழு சிறிய கற்களை எறிந்துவிட்டு பிறகு

கிப்லாவை முன்நோக்கி துஆ செய்யவேண்டும்.பிறகு நடு ஜம்ராவான “ஜம்ரதுல் உஸ்தா” என்னுமிடத்தில் ஏழு சிறிய கற்களை எறிந்துவிட்டு பிறகு கிப்லாவை முன்நோக்கி துஆ செய்யவேண்டும்.பிறகு நடு ஜம்ராவான “ஜம்ரதுல்அகபா ” என்னுமிடத்தில் ஏழு சிறிய கற்களை எறிந்துவிட்டு துஆ செய்யாமல் திரும்பிவிட வேண்டும் இவ்வாறு நபி(ஸல்) செய்துள்ளார்கள்.tn

11ம் 12 ம் நாட்கள் கல்லெறிந்து விட்டு விரும்பியர் மக்கா சென்று விடலாம்.விரும்பியவர்கள் 13 ம் மினாவில் தங்கி கல்லெறிந்து விட்டு திரும்பலாம்.[divider]

தவாஃபுல் விதாஃ

மினாவில் கல்லெறிந்து முடிந்தவுடன் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன.என்றாலும்

இறுதியாக விடை பெரும் தவாபான “தவாஃபுல் விதாஃ” பயண தவாபை (மாதவிடாய் பெண்கள் தவிர) நிறைவேற்ற வேண்டும்.

[box type=”note” ]மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டு செல்லலானார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் “கடைசி கிரியையை அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாப்ஃ) செய்து விட்டு புறப்படுங்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2350, 2351 (2:200)[/box][divider]

இஹ்ராமில் தடுக்கப் பட்டவைகள்

  1.  தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.
  2. நகங்களை வெட்டக் கூடாது.
  3.  நறுமணம் பூசக் கூடாது
  4.  திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது.
  5. உடலுறவு கொள்ளக் கூடாது.
  6. ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது.
  7. வேட்டையாடுதல் கூடாது[divider]

ஹஜ்ஜில் தடுக்கப் பட்டவைகள்

[box type=”note” ]“ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது.(2:197)[/box]

[box type=”note” ]அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப் பிராணியை (பலியிட வேண்டும்)56 அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச் சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! ‘அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 2:196[/box][divider]

உம்ரா ஹஜ்ஜில் அதிகமதிகம் நன்மைகளை அடைதல்.

ஹஜ் உம்ராவில் கடமைகளையும்,சுன்னத்துகளையும் சரியான முறையில் கடைபிடித்துவிட்டு மேலும்

நேரம் கிடைக்கும்போது பல நன்மையான காரியங்கள் செய்வது மூலம் அதிகமதிகம் அல்லாஹ்விடம்

அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

உம்ராவிர்க்கான தவாபை முடித்துவிட்டு அடுத்த வேலை பர்லு தொழுகைக்காக ஹரமிர்க்கு செல்லும்போது உபரியான தவாபை செய்து கொள்ளலாம்.ஒவ்வொரு தொழுகைக்கு முன்போ அல்லது பின்போ வசதியிருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் உபரியான தவாபை செய்து கொள்ளலாம்.

ஹரமிர்க்கு செல்லும் வழியில் ஏராளமான வயதானவர்கள் மற்றும் பலர் அமர்ந்திருப்பார்கள் அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம்.

ஹரமிர்க்குள் பர்லு தொழுகைகள் தவிர உபரியான தொழுகைகள் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை தொழுது கொள்ளலாம்.

முக்கியமாக மினாவில் தங்கும் போது உணவுப் பொட்டலங்கள் அதிகமதிகம் சாப்பிடாமல் குப்பையில் கொட்டப் படுகின்றது. ஏனென்றால் மினாவில் ஹோட்டல்கள் இல்லாததால் மூன்று நாட்களும் அவர்கள் கொடுக்கும் உணவைதான் உண்ணவேண்டும்.எனவே மக்காவில் கிடைத்த உணவுபோல் மினாவில் கிடைக்காது ஆகையால் அமெரிக்கா ஐரோப்பா போன்ற பிரதேசத்திலிருந்து வருபவர்களில் அனைத்து நாட்டினரும் கலந்திருப்பதால் உணவுகள் அனைவருக்கும் பிடித்த வகையில் இருப்பதில்லை ஆகையால் உணவுப் பொட்டலங்களை பிரித்து taste செய்துவிட்டு மற்ற அனைத்தையும் குப்பையில் கொட்டி விடுகின்றனர்.ஆகையால் ஒவ்வொரு கூடாரத்திலும் ஒரு காலி அட்டைப் பெட்டியை வைத்துவிட்டு வீணாகும் உணவுப் பொருட்களை அதில் போட சொல்ல வேண்டும் பிறகு அதை வெளியில் கொண்டு சென்று தற்காலிக கூடாரங்களில் அமர்ந்திருக்கும் ஏழைகள் குழந்தைகள் போன்றோருக்கு பங்கிட்டு கொடுக்கலாம்.

அமெரிக்கா,ஐரோப்பா கூடாரத்திற்கு மிக அருகில் மலை அடிவாரத்திலும் மலை மீதும் பல

ஏழை மக்கள் தங்கி இருப்பார்கள் அவர்களுக்கு அந்த மிஞ்சிய உணவுகளை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

அரபாவில் அல்லாஹ் பாவ மன்னிப்பு வழங்குவதாக கூறுகிறான் ஆகவே குர் ஆனில் கூறப் பட்டுள்ள துஆக்களையும் ஹதீஸ்களில் கூறப் பட்டுள்ள துஆக்களையும் அதிகமதிகம் ஓதவேண்டும்.[divider]

முக்கிய துஆக்கள்

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201[divider]

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

2. எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286[divider]

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ.

3. எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8[divider]

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

4. எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;, எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! 3:16[divider]

رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ .

5. என் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். 3:38[divider]

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

6. எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக. 3:147[divider]

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ

7. எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83[divider]

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ

8. எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் 7:23[divider]

عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ

9. நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம், எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! 10:85[divider]

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ10.

10.எங்கள் இறைவனே! இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! 10:86

رَبِّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْنَ

11. என் இறைவனே! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்;, நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன். 11:47[divider]

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

12. என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!. 14:40[divider]

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

13. எங்கள் இறைவனே! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!. 14:4[divider]

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

14. எங்கள் இறைவனே! நீ உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் நேர்வழியை எமக்கு எளிதாக்கி தந்தருள்வாயாக! 18:10[divider]

رَبِّ زِدْنِيْ عِلْمًا

15. என் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! 20-114[divider]

رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ

16. என் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன். 21:89[divider]

رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ

17. என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகின்றேன். 23:97[divider]

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

18. எங்கள் இறைவனே! நாங்கள் உன் மீது ஈமான் கொண்டு விட்டோம், நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீயே மிகச்சிறந்தவன். 23:109[divider]

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

19. என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன். 23:118[divider]

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

20. எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும். 25:65[divider]

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا

21. எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74[divider]

رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ

22. என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக! 26:83[divider]

وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِيْنَ

23. இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக! 26:84[divider]

وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ

24. இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக! 26:85[divider]

وَلاَ تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ

25. இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவு படுத்தாதிருப்பாயாக! 26:87[divider]

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ

26. என் இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக! 27:19[divider]

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ

27. என் இறைவனே! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்;, ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக! 28:16[divider]

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ

28. என் இறைவனே! நல்லவர்களிலிருந்து நீ எனக்கு (குழந்தையை) தந்தருள்வாயாக. 37:100[divider]

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ

29. என் இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல் அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! எனக்கு என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் தவ்பா செய்து (உன்பக்கம் திரும்பி) விட்டேன். இன்னும் நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன். 46:15[divider]

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ

30. எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன். 59:10[divider]

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَن

31.எங்கள் இறைவனே! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். 60:5[divider]

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ.

32.எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். 66:8[divider]

رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَلاَ تَزِدِ الظَّالِمِيْنَ إِلاَّ تَبَارًا

33. என் இறைவனே! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே. 71:28[divider]

நபி(ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனைகள்

1-اَللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

01. இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பாக்கியங்களைத் தருவாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!

(அறிவிப்பவர்: அனஸ் (ரழி),நூல்: ஸஹீஹுல் புஹாரி-4522,6389)[divider]

2- اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ ، وَعَذاَبِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنَى ،وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِـيْحِ الدَّجَّـالِ، اَللَّهُمَّ اغْسِلْ قَلْبِيْ بِمَـاءِ الثَّلْجِ وَالْبَـرَدِ، وَنَقِّ قَـلْبِيْ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ

02. இறைவா! நரகின் சோதனை, நரக வேதனை, கப்ரின் சோதனை, கப்ரின் வேதனை, செல்வத்தின் சோதனையின் தீயவிளைவு, வறுமையின் சோதனையின் தீயவிளைவு ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! மஸீஹுத் தஜ்ஜாலுடைய சோதனையின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பனிக் கட்டி மற்றும் பனித்துளி நீரால் என் உள்ளத்தை கழுவி விடுவாயாக! வெண்மையான துணியை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்துவதைப் போல் என் உள்ளத்தை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் நீ ஏற்படுத்தியுள்ள தூரத்தைப் போல எனக்கும் என் பாவங்களுக்கும் மத்தியில் தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! சோம்பல், பாவச்செயல், மற்றும் கடன் ஆகியவற்றிலிருந்து நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6377)[divider]

3-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ وَالْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ.

03. யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம், கப்ரின் வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரழி),நூல்: ஸஹீஹுல் புஹாரி-6377)[divider]

4-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوْءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ اْلأَعْدَاءِ

04. யாஅல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும் விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீயமுடிவுகளை விட்டும் விரோதிகளின் கேளி, கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),நூல்: ஸஹீஹுல் புஹாரி-6347)[divider]

*5-أَللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِي الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ ، وَأَصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ ، وَأَصْلِحْ لِيْ آخِرَتِي الَّتِيْ فِيْهَا مَعَادِيْ ، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِّيْ فِيْ كُلِّ خَيْرٍ ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِّيْ مِنْ كُلِّ شَرٍّ

05. யாஅல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு சீர்படுத்து வாயாக! ஏனெனில் அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக!

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-5264)[divider]

6-اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَي

06. யாஅல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும் பத்தினித் தனத்தையும் (பிறரிடம்) தேவையற்ற நிலையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.

அறிவிப்பாளர் :இப்னு மஸ்வூத் (ரழி) :நூல் முஸ்லிம் 5265[divider]

7-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ، أَللَّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا، زَكِّهَا أَنْتَ خَيْرُمَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا، أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَيَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لاَيَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لاَيُسْتَجَابُ لَهَا

யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், வயோதிகம் மற்றும் கப்ர் வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். யாஅல்லாஹ்! என் உள்ளத்தில் உனது அச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனை தூய்மைப்படுத்துவாயாக! நீதான் அதனைத் தூய்மைப் படுத்துவோரில் மிகச் சிறந்தவன். நீயே அதன் பொறுப்பாளன். நீயே அதன் தலைவனுமாவாய். யாஅல்லாஹ்! பயனளிக்காத கல்வியைவிட்டும் (உனக்கு) பயப்படாத உள்ளத்தை விட்டும் நிறைவடையாத மனதை விட்டும் பதிலளிக்கப்படாத (ரழி),நூல்: ஸஹீஹுல் புஹாரி-6377)[divider]

தொகுப்பு FRTJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.