பர்மாவில் முஸ்லிம்கள் இன அழிப்பு

bur
மியான்மரின் (பர்மா) ராக்கேன் மாநிலத்தில் புத்தமத தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டு வருகிறார்கள்.இதில் வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் என்று பாராமல் கொன்று குவித்து வருகின்றனர்.முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.
பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர்.இவ்வாறு வெளியேறிய மக்கள்
கப்பலில் மலேசியா தாய்லாந்து கடல் பகுதியில் குடிக்க தண்ணீர் இல்லாமலும், உண்ண உணவில்லாமலும் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.இவர்களை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள மறுத்து வந்த நிலையில் மலேசியா,துருக்கி போன்ற நாடுகள் அவர்களுக்கு உண்ண உணவளித்து வருகிறது.ஆனாலும் உயிரை காப்பாற்றிக் கொள்ள நாட்டிலிருந்து வெளியேறி கடலில் உயிரிழக்கும் அவலமும் நிகழ்கிறது.

இந்த இன அழிப்புக்கு சூத்ரதாரி அஷ்வின் விராத்து என்ற புத்த துறவி தான்.இவன் சிறு வயதிலிருந்து இஸ்லாமிய வெறுப்பில் வளர்ந்தவன்.
மேலும் அந்நாட்டு அரசியலில் இன வெறியை வளர்த்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டான்.இவன் 2001 ம் ஆண்டு 969 என்ற தீவிர வாத
இயக்கத்தை ஆரம்பித்து மக்கள் மனதில் இன வெறியை வளர்க்க ஆரம்பித்தான்.இந்த இயக்கத்தின் நோக்கம் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை சூறையாடி, முஸ்லிம் பெண்களை ஏமாற்றி திருமணம் புரிவது,எதாவது தற்காலிக குற்றச் செயல்களை காரணம் காட்டி கலவரம் செய்து முஸ்லிம்களை படுகொலை செய்வது போன்ற செயல்களை செய்வதாகும்.

மேலும் இந்த அமைப்பு இலங்கையில் போதுபல சேனா என்ற தீவிரவாத இயக்கத்துடன் கை கோர்த்து இலங்கையிலும் இத்தகைய இஸ்லாமிய இன அழிப்புக்கு வலு சேர்த்தது.உலகில் உள்ள புத்த,பெளத்த துறவிகளின் இனத்தை காக்க வேண்டும் என்ற போர்வையில் மக்களை மூளைச் சலவை செய்து சிறு வயதிலேயே அவர்கள் மனதில் இஸ்லாமிய எதிர்ப்பை விதைத்து வருகிறார்கள்.
இவனை டைம் இதழ் பேட்டி எடுத்தது அதில் இஸ்லாமியர்களை அந்நாட்டிலிருந்து முற்றிலும் வெளியாக்க வேண்டும் என்று உளறி இருந்தான்.
இதன் காரணமாக அவனை கடுமையாக அந்த இதழ் சாடி இருந்தது.uno என்ற அமைப்பும் இதை கண்டும் காணாமல் உள்ளது.
உலக ஊடகமும் இஸ்லாமியர்கள் என்பதால் பாராமுகமாக உள்ளன.இஸ்லாமிய நாடுகளும் வாய் திறக்க மறுத்து வருகின்றன.இறைவனை மட்டுமே நம்பி அந்த மக்கள் உணவுக்காகவும் உயிருக்காகவும் போராடி வருகின்றனர்.

frtj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.