ரமழான் மாத பிறை தென்பட்டால் தெரியப்படுத்துங்கள்! பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!

அறிவிப்பவா; : அபூஹுரைரா (ரலி)      நூல் : புகாரி (1019)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸாயீ (2109)

பிறையை கண்களால் கண்டு நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்பது நபி வழிமுறையாகும். கண்களால் காணாது கணித்தல் அடிப்படையில் நோன்பை ஆரம்பிப்பதும், உலகத்தின் எத்திசையில் கண்டாலும் நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் புது வழியாகும் என்பதை மேற்குறித்த ஹதீஸ்கள் எமக்கு உணர்த்துகின்றன.

இதற்கமைய, இன்ஷா அல்லாஹ் பிரான்ஸில் எந்தப் பகுதியிலாவது ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட தொலை பேசி இலக்கங்களுக்கு தெரியப்படுத்துமாறு பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் உங்களை கேட்டுக்கொள்கிறது.

• முகம்மது ருக்னுதீன் 0033662267273
• அமீன் ஆசிக்         0033673635269
• சம்சுதீன்             0033666563023
• ஹசன் அப்துல் ரசாக் 0677774928
• அப்துல் ஹக்கீம்     0033650856575

அமீன் ஆசிக் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.