பிரான்ஸில் ஏகத்துவ எழுச்சி – அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரான்ஸில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை துவங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே!

பிரான்ஸ் நாட்டில் பல்வேறு விதமான வகைகளில் நமது ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அழைப்புப் பணி செய்து வருகின்றனர். நமது ஊரில் நடைமுறையில் உள்ள லோக்கல் சேனல்களைப் போல பிரான்சில் நடைமுறையில் உள்ள ஒரு லோக்கல் சேனல் வழியாக சகோதரர் பீஜே அவர்களது உரைகளை ஒளிபரப்ப அதைப் பார்த்த ஒரு கிறிஸ்தவ சகோதரி நமது தலைமையகத்திற்கு பிரான்ஸிலிருந்து ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அவர் தனது கடிதத்தில், நான் உங்களது உரைகளைக் கேட்டதிலிருந்து உண்மையான இறைவனைப் பற்றி அறிந்து கொண்டேன் எனவும், உங்கள் பேச்சுக்கள் வாயிலாக இறைவன் எனக்கு நல்ல மனத் தெளிவை ஏற்படுத்தித் தந்தான் எனவும் குறிப்பிடிருந்தார்.

மேலும், தான் பாண்டிச்சேரி வந்திருந்த போது அங்கு அலைந்து திரிந்து ஒரு குர்ஆன் தமிழாக்கத்தை வாங்கினேன்; ஆனால் அதிலுள்ளவை எனக்குப் புரியவில்லை என்றும், தங்களுடைய விளக்கங்கள் எனக்கு மிக இலகுவாக எளிமையாகப் புரிகின்றது என்றும், எனக்கு இறைவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நீங்கள் உதவ வேண்டும் என்று நமது மாநிலத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கையும் வைத்திருந்தார்.

அவரது கடிதத்தை நமது பிரான்ஸ் நிர்வாகிகளுக்கு அனுப்பி அந்தப் பெண்மணியை நமது நிர்வாகிகள் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்தனர்.


அவரது கணவர் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் ஊழியம் செய்யக் கூடிய அளவுக்கு ஆழ்ந்த கிறிஸ்தவப் பற்று கொண்டவர் என்றும், தான் இஸ்லாமியக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட விஷயம் எனது கணவருக்குத் தெரிந்தால் எதிர்ப்பு கிளம்பும்; எனவே தான் உங்களை எனது வீட்டில் சாந்திக்காமல் ஒரு பொது இடத்தில் வைத்து சந்திக்கின்றேன் என்றும் விளக்கமளித்துள்ளார்.

அந்தப் பெண்மணிக்கு பீஜே அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இயேசு இறை மகனா உட்பட இதர புத்தகங்களையும் அன்பளிப்புச் செய்து, ஆன்லைன்பி.ஜே உள்ளிட்ட நமது இணையதளங்ளை நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

வரக்கூடிய மே 8 ஆம் தேதி சகோதரர் பீஜே அவர்கள் பதிலளிக்கும் பிரான்ஸிற்கான ஆன்லைன் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்ளுமாறும் அந்தப் பெண்மணியை நேரில் சந்தித்த நமது பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அதீன் மற்றும் நமது மற்ற நிர்வாகிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

வீட்டில் எதிர்ப்பு இருப்பதால் திருக்குர்ஆன் பெற்றுக் கொள்ளும் புகைப் படைத்தையும் தனது பெயரையும் வெளியிட வேண்டாம் என்றும் அந்தப் பெண்மணி கோரிக்கை வைத்துள்ளார்.

இப்படி பல வடிவங்களில் பலதரப்பட்ட மக்களிடத்திலும் இந்த தூய சத்திய மார்க்கத்தை எடுத்தியம்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த அழைப்புப்பணி செவ்வனே தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.