விவாதத்திலிருந்து கிறிஸ்தவர்கள் தப்பி ஓட்டம்

ஜெர்ரி தாமஸ் என்பவர் பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களை விவாதத்திற்கு அழைத்ததாகவும், யாரும் தன்னோடு விவாதம் செய்ய முன்வரவில்லை என்றும், குறிப்பாக ஜாகிர் நாயக் அவர்களை தான் விவாதம் செய்ய அழைத்து அவர் தன்னோடு விவாதம் செய்யாமல் ஓட்டமெடுத்து விட்டார் என்றும் அதற்கான ஆதாரங்களோடு தான் ஜாகிர் நாயக்கிற்கு விவாத அழைப்பு விடுத்து அவர் விவாதத்திற்கு வராமல் பின்வாங்கி ஓடிய செய்தியையும் கடித ஆதாரங்களுடன் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த இடத்தில் ஜெர்ரி தாமஸ் என்ற இவர் விவாதம் செய்கின்றேன் என்ற பெயரில் கூத்தடிக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அதாவது, ஜெர்ரி தாமஸ் என்பவரது பாஷையில் விவாதம் செய்வதென்பது என்னவென்றால், ஒரு தலைப்பை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்; அந்த குறிப்பிட்ட தலைப்பில் இவர் ஒரு மணி நேரம் உரையாற்றுவாராம்; நாம் ஒரு மணி நேரம் உரையாற்ற வேண்டுமாம்! இந்த இரண்டு மணி நேரத்தோடு விவாதம் முடிவடைந்து விடுமாம். என்னே அற்புதமான விவாத வழிமுறை(?). இந்த பாணியில் விவாதம் செய்ய இவர் அழைத்த விவாத அழைப்பையும் கூட ஜாகிர் நாயக் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நமக்கு இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஏனெனில் குர் ஆன ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களால் மட்டுமே இவர்களுடன் விவாதம் செய்ய முடியும். கொள்கை சரி இல்லாமல் எவ்வளவு திறமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் விவாதம் செய்ய மறுத்து ஓட்டம் பிடிக்கத் தான் செய்வார்கள்.

ஜெர்ரி தாமஸ் என்பவர் முஸ்லிம் இமாம்கள் அறிஞர்கள் என்ற பெயர் பெற்றவர்கள் உளறியவைகளை திரட்டி வைத்துக் கொண்டு அது தான் இஸ்லாத்தின் கருத்து என்று சித்தரிப்பது தான் இவரது வழி முறை. ஜாகிர் நாயக்கோ இன்னும் பலரோ இமாம்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை சொல்வதால் இமாம்களின் சில உளறல்களை ஜெர்ரி தாமஸ் போன்றவர்கள் எடுத்து வைக்கும் போது அவர்கள் வாயடைக்கும் நிலை ஏற்படும்.


இதற்கு பயந்து தான் விவாதத்தில் இருந்து பின்வாங்குகிறார்கள். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்த வரை இஸ்லாத்தை விமர்சிப்பதாக இருந்தால் குர்ஆனில் இருந்தும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்தும் மட்டும் விமர்சிக்க வேண்டும். வேறு எவருடைய கருத்துக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்ற நிலை பாட்டில் இருப்பதால் நம்மோடு இவர்கள் விவாதிக்கும் போது நிராயுதபாணிகளாகத் தான் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதே நேரத்தில் விவாத சவடால் புகழ் ஜெர்ரி தாமஸ் என்பவர் விவாதம் செய்யத் தயாரா? என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்து எழுத்துப்பூர்வ அழைப்பு விடுக்க, தற்போது ஜெர்ரி தாமஸுடைய நிலை மிகவும் பரிதாபம்.

ஆம்! கதவிடுக்கில் சிக்கிய எலியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடத்தில் வசமாக வந்து மாட்டிக் கொண்டு இப்போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று எஸ்கேப் ஆகியுள்ளார் ஜெர்ரி தாமஸ்.

நம்மை அணுகிய அவர்களிடத்தில் விவாத வழிமுறைகள் குறித்து நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து நேரடி உரையாடல் அவர்களோடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் சகோதரர் பீஜே அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த சந்திப்பு முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

ஒரு மணி நேர உரை நிகழ்த்திவிட்டு விவாதம் நிறைவடைந்து விட்டது என்று செல்லும் இந்த விளையாட்டுக்கள் எல்லாம் எங்களிடம் செல்லாது; ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் அதை முழுவதுமாக பேசி எது உண்மை என்பதை மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் விவாதம் அமைய வேண்டும். குறைந்தது இரண்டு நாட்கள் அதிகபட்சம் ஒருவாரம் கூட ஒரு தலைப்பில் விவாதிக்க வேண்டும். அதில் நீங்கள் ஒரு 15 நிமிடம் விவாதிக்க அந்த விஷயத்தை நாங்கள் மறுக்க, அதை நீங்கள் மறுக்க இப்படி போவது தான் விவாதமே ஒழிய நீங்கள் சொல்வது விவாதமாகாது என்று டிஎன்டிஜே அவர்களுக்கு கிடுக்கிப்பிடி போட தங்களை விட்டால் போதும், தப்பித்தால் போதும் என்று தற்போது தலைதெரிக்க ஓடியுள்ளது விவாத சவடால் விட்ட கூட்டம்.

அதற்கான வீடியோ ஆதாரங்கள், மற்றும் விவாத பின்னனிகள் மறும் விவாதம் குறித்த நமக்கும் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்துக்கள் அனைத்தும் நமது ஆன்லைன்பி.ஜே இணையதளத்தில் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது.

விடியோ மற்றும் விவாத பின்னனிகளை காண இங்கே கிளிக் செய்யவும்

புகழனைத்தும் இறைவனுக்கே!

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.

அல்குர்-ஆன் 74 : 50, 51

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.