பரிணாமத்தை நிரூபிப்பதற்காக பரிணாமவாதிகள் முன்வைத்த ஒவ்வொரு படிமமும் பொய்யானவை அல்லது பிழையாக உபயோகிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பில்டவுன் மனிதன் என்பது கட்டுக்கதையானது. நேப்ரஸ்கா மனிதனின் பல் கரடியின் படிமத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அழிந்து போன உயிரினம் என்று கூறப்பட்ட கொல்கான்ந்த் என்ற மீன் உயிருடன் பிடிப்படடு 1938 முதல் மாற்றமடையாமல் இருக்கிறது. மனித பரிணாமம் என்ற கட்டுக்கதைக்காக தயாரிக்கப்பட்ட அனைத்து மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் இன்றைய மனிதனுடையது அல்லது அழிந்து போன குரங்கு இனத்துடையது என்பது நிரூபணமாயுள்ளது.
பரிணாமவாதிகள் ஒரு போதும் தோன்றியிராத உயிரினங்களை கற்பனை செய்து ஓவியர்களை வாடகைக்கு அமர்த்தி புதிய அமைப்புகளை வரைந்து அவற்றை கொண்டு பரிணாம வளர்ச்சி என்பது விஞ்ஞான உண்மை என்பதாக மக்களை நம்ப வைக்க முற்படுகின்றனர். இந்த பொய்யான தகவல்கள் பத்திரிக்கைகளில், சஞ்சிகைகளில் மற்றும அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதை அதனை உருவாக்கியவர்களின் கற்பனை தவிர வேறில்லை. இவற்றை படிமங்களில் காண முடியவில்லை. பரிணாமவாதிகள் அவர்களின் கைகளால் படைக்கபட்ட பொய்யான தகவல்களில் இறுதியாக விழுந்து இந்த பொய்யான டார்வினிச மதத்தை நம்புகின்றனர்.
டார்வினிச ஷாமன மதம் கூறுகிறது |
நவீன விஞ்ஞானம் கூறுகிறது. |
முதல் உயிரினம் தற்செயலாக உருவானது |
உயிரினங்கள் தற்செயலாக உருவாக முடியாது. ஒரு தனி புரதமோ அல்லது ஒரு சாதாரண செல் அல்லது முழு உயிரினமும் தற்செயலாக உருவாகவே முடியாது என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு புரதம் தற்செயலாக உருவாவது என்பது 10950 இல் 1 என்ற சாத்திய வீதத்திலாகும். நடைமுறையில் இது பூஜ்ஜிய சாத்திய வீதமாகும். அதாவது ஒருபோதும் நிகழாது. |
உயிரினங்கள் முன்னைய அபிவிருத்தி அடையாத மூதாதையரிலிருந்து தோன்றியது |
ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் தோன்ற முடியாது. ஓவ்வொரு உயிரினத்திற்கும் அதற்குறிய தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் படிப்படியாக மாற்றமடைந்து ஒரு புது உயிரினமாக தோன்ற முடியாது |
படிமங்கள் பரிணாம வளர்ச்சி திட்டத்தை உறுதிப்படுத்துகிறது |
படிமங்கள் பரிணாம வளர்ச்சியை மறுத்து அனைத்தும் படைக்கப்பட்டன என்பதை காட்டுகிறது. சுமார் 1000 லட்சம் படிமங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் முழுமையடைந்த நன்கு அபிவிருத்தியடைந்தை காட்டுகின்றன. ஒரு படிமத்தில் கூட அது பரிணாமம் அடைந்ததற்கான எந்த சான்றும் இல்லை |
மாற்றங்கள் மூலம் பல உயிரினங்கள் தோன்றின |
மாற்றங்கள் உயிரினங்களை அழிக்குமே தவிர அதை வேறொரு உயிரினமாக மாற்றாது. அவ்வாறு மாற்றமடைந்தால் அந்த உயிரினம் அழிந்துவிடும் அல்லது முடமாகிவிடும் |
மனிதன் குரங்கு போன்ற உயிரினங்களிலிருந்து பரிணாமம் அடைந்தான் |
மனிதனும் குரங்கும் மிகவும் வித்தியாசமான உயிரினங்கள். அவற்றுக்கிடையே எந்தவித குடும்ப ஒற்றுமையும் கிடையாது. உருவ ஒற்றுமை இருந்த போதிலும் அவற்றுக்கிடையே மலையளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என்றும் அவற்றை பரிணாமத்தை கொண்டு விளக்க முடியாது |
இயற்கையில் காணப்படும் இயற்கை தெரிவு பரிணாமத்திற்கான சான்று |
இயற்கை தெரிவு மூலம் பரிணாமமோ அல்லது வேறொரு புது உயிரினமோ தோன்ற முடியாது |
…………..வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து ……. (சூரத் ஆல-இம்றான் : 191)
மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (சூரத் காப்ஃ : 6)
……………(மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்¢ பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்!……. (சூரத் முல்க் : 3)
ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று – வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும – மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? – பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) (சூரத் காஷியா 17-20)
நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன. இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (சூரத் ஜாஸியா 3-4)