முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு

17.04.2011 அன்று டெல்லியில் நடந்த INSTITUTE OF OBJECTIVE STUDIES என்ற கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேசும் பொழுது “இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும். இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும், இந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும், கஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன. ஆனால், உண்மை எதுவெனில்,மைசூர் மன்னன் மாவீரன் திப்பு சுல்தான் 153 கோயில்களுக்கு மானியம் கொடுத்துள்ளார்.மேலும் சமஸ்கிருதம்- உருது மொழி இணைந்த இந்திய கலாச்சாரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.ஆனால் அதனை மறைக்க முகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி என்று கூறினார்.” தன்னுடைய இந்த உரைக்கு ஆதாரமாக வரலாற்று ஆசிரியர் B.N.பாண்டே எழுதிய “History in the Service of Imperialism” வரலாற்று நூலை மேற்கோள் காட்டி உள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பேச்சு உச்ச நீதி மன்றத்திலும் வெளிப்படவேண்டும். ராமர் கோயிலை இடித்து தான் பாபர், பள்ளிவாசல் கட்டினார் என்ற வாரலாற்று திரிப்பை உடைக்க மார்கண்டேய கட்ஜு முன்வரவேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அயோக்கிய தீர்ப்பை ரத்து செய்து, உச்ச நீதி மன்ற தானாக இவ்வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி-27 அன்று சென்னையிலும் மதுரையிலும் பல லட்சக்கணக்கான மக்களை திரட்டி TNTJ பேரணி மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அஜ்மல், கோவை
நன்றி : TNTJ.NET

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.